Matthew 15

Matthew 15:1

இயேசுவுக்கும் மதத்தலைவர்களுக்கும் இடையே உண்டான சந்திப்பைக்குறித்துச் சொல்ல இங்கு துவங்குகிறது.

முன்னோர்களின் பாரம்பரியத்தை மீறி

“முந்தின மதத் தலைவர்கள் கொடுத்த சட்டங்களை மதிக்காமல்.”

அவர்கள் கை கழுவி

அவர்கள் கை கழுவி

“சட்டம் எதிர்ப்பார்க்கிறபடி பண்டிகையில் அவர்கள் தங்கள் கைகளைக் கழுவாமல்”

Matthew 15:4

இயேசுவுக்கும் மதத்தலைவர்களுக்கும் இடையே உண்டான சந்திப்பைக்குறித்துச் சொல்வது இங்குத் தொடருகிறது.

யாராயினும்

“எவராயினும்” அல்லது “எவன் ஒருவன்”

தனது தகப்பனை கனம்பண்ணி

தன் தகப்பனைப் பராமரிப்பதால் மரியாதை செலுத்தி

உங்கள் பாரம்பரியத்திற்காக தேவனுடைய வார்த்தையை வெறுமையாக்கினீர்கள்

மறு மொழிபெயர்ப்பு: “நீங்கள் பாரம்பரியத்தை தேவனுடைய வார்த்தைக்கு மேலாக உயர்த்தினீர்கள்”

Matthew 15:7

இயேசுவுக்கும் மதத்தலைவர்களுக்கும் இடையே உண்டான சந்திப்பைக்குறித்துச் சொல்வது இங்குத் தொடருகிறது.

ஏசாயாவின் தீர்க்கதரிசனம் நன்றாக செய்தது

மறு மொழிபெயர்ப்பு: “ஏசாயா இந்த உண்மையை தனது # தீக்கதரிசனத்தில் சொல்லி இருக்கிறார்”

அவன் சொன்னபொழுது மறு மொழிபெயர்ப்பு: “தேவன் சொன்னதை அவன் சொன்னபொழுது”

இவர்கள் தங்கள் உதடுகளினால் என்னை கணம் பண்ணுகிறார்கள்

மறு மொழிபெயர்ப்பு: “இந்த மக்கள் நல்ல காரியங்கள் எல்லாவற்றையும் சொல்லுகிறார்கள்”

ஆனால் அவர்கள் இருதயமோ எனக்கு தூரமாய் இருக்கிறது

மறு மொழிபெயர்ப்பு: “ஆனால் அவர்கள் என்னை உண்மையில் நேசிப்பதில்லை.”

விருதாவாய் என்னை ஆராதிக்கிறார்கள்

மறு மொழிபெயர்ப்பு: “அவர்கள் ஆராதனை என்னில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை” அல்லது “அவர்கள் என்னை ஆராதிப்பது போல நடிக்கிறார்கள்”

மனுஷரின் கட்டளைகள்

“மனுஷர் இயற்றும் சட்டங்கள்.”

Matthew 15:10

இயேசு மக்களுக்கு உவமையைக் கொண்டு கற்றுக்கொடுக்கிறார்.

கேட்டு புரிந்துகொள்

இயேசு வரப்போகிற வாக்கியத்தின் முக்கியத்துவத்தைச் சொல்லுகிறார்.

Matthew 15:12

இயேசு மத்தேயு 15:10,11 இல் தான் சொன்ன உவமையின் பொருளை இங்கு தனது சீடர்களுக்கு விவரிக்கிறார்.

இந்தக் கூற்றை பரிசேயர்கள் கேட்டபோது வருந்தினரா?

மறு மொழிபெயர்ப்பு: “இந்தக் கூற்று பரிசேயர்களைக் கோபப்படுத்தினது?” அல்லது “இந்தக் கூற்று பரிசேயர்களை வருத்தியது?”

Matthew 15:15

இயேசு மத்தேயு 15:10,11 இல் தான் சொன்ன உவமையின் பொருளை இங்கு தனது சீடர்களுக்குத் தொடர்ந்து விவரிக்கிறார்.

நமக்கு

“சீடர்களாகிய நமக்கு”

கடந்துசென்ற

“போகிற”

கழிப்பிடம்

உடல் கழிவை வெளியேற்றுமிடத்திற்கான இடத்தைக் குறிக்கும் நல்ல வார்த்தை

Matthew 15:18

இயேசு மத்தேயு 15:10,11 இல் தான் சொன்ன உவமையின் பொருளை இங்கு தனது சீடர்களுக்குத் தொடர்ந்து விவரிக்கிறார்.

வாயிலிருந்து வருபவைகள்

“ஒரு மனிதன் சொல்லும் வார்த்தைகள்”

இருதயத்திலிருந்து வருகிறது

“ஒரு மனிதனின் உண்மையான உணர்வுகளிலிருந்தும் நினைவுகளிலிருந்தும் வருபவை”

கொலை

அப்பாவிகளைக் கொலைசெய்வது

அவமானங்கள்

“மற்றவர்கள் புண்படப் பேசப்படுபவைகள்””

கழுவாதக் கைகள்

பண்டிகையில் கழுவப்படத்தக்க கைகள்

Matthew 15:21

கானானிய பெண்ணின் மகளை இயேசு குணப்படுத்துகிறக் கணக்கை இது ஆரம்பிக்கிறது.

அந்தப் பகுதியிலிருந்து வந்த ஒரு கானானியப் பெண்

அப்பெண் இஸ்ரவேலுக்கு வெளியே இருக்கும் தன்னுடைய சொந்த நாட்டை விட்டு இஸ்ரவேலுக்குள் வந்து ஏசுவைக் கண்டாள்.

கானானிய பெண்

கானான் இப்பொழுது ஒரு நாடாக இல்லை: “கானானியர்கள் என்று அழைக்கப்படும் ஒரு மக்கள் கூட்டத்திலிருந்த பெண்.”

என் மகள் பிசாசினால் மிகவும் கொடுமைபடுத்தப்படுகிறாள்

“ஒரு பிசாசு என் மகளை மிகவும் கொடுமைப்படுத்துகிறது”

ஒரு வார்த்தைக் கூட பதிலாகத் தரவில்லை

“ஒன்றும் சொல்லவில்லை”

Matthew 15:24

இயேசு கானானிய பெண்ணின் மகளைக் குணமாக்கும் சம்பவத்தின் கணக்கை இது தொடர்கிறது.

அவள் வந்தாள்

“கானானிய பெண் வந்தாள்”

பிள்ளைகளின் அப்பம்...நாய்க் குட்டிகள்

“யூதர்களுக்கு முறையாக உள்ளவை...புறஜாதியார்கள்”

Matthew 15:27

இயேசு கானானிய பெண்ணின் மகளை குணமாக்கும் சம்பவத்தின் கணக்கை இது தொடர்கிறது.

தங்கள் எஜமானின் மேசையிலிருந்து விழும் அப்பத்தின் துணிக்கைகளை நாய்க் குட்டிகள் கூடத் தின்னும்

யூதர்கள் தூர வீசும் சில நல்லக் காரியங்களை புறஜாதியார் அனுபவிக்க முடிய வேண்டும்.

அவள் மகள் குணமாக்கப்பட்டாள்

“இயேசு அவள் மகளைக் குணமாக்கினார்” அல்லது “இயேசு அவள் மகளை நன்றாக ஆக்கினார்”

அந்த மணி நேரத்தில்

“அதே மணிப்பொழுதில்” அல்லது “உடனே”

Matthew 15:29

இது இயேசு கலிலேயா மக்களில் அநேகரை குணமாக்கும் சம்பவங்களின் கணக்கைத் துவங்குகிறது.

முடம், குருடு, ஊமை, ஊனமுற்ற மக்கள்

“நடக்கமுடியாத, பார்க்கமுடியாத, பேசமுடியாத, கைகள் கால்கள் அடிபட்டவர்கள்.” சில முந்தய எழுத்துப் படிவத்தில் இந்த வார்த்தைகள் வித்தியாசமான வரிசையில் உள்ளது.

இயேசுவின் பாதத்தில் அவர்களைக் கொண்டுவந்தார்கள்

“கூட்டத்தார் வியாதியஸ்தர்களை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள்”

Matthew 15:32

இது இயேசு கலிலேயா மக்களில் அநேகரை போஷிக்கும் சம்பவத்தின் கணக்கைத் தொடர்கிறது.

மயங்கிடுவார்கள்

பெறக்கூடிய அர்த்தங்கள்: 1. “தற்காலிகமாக தங்களது சுயநினைவை இழந்துவிடுவார்கள் என்று பயந்ததினால்” அல்லது 2. “அவர்கள் பெலனற்றுவிடுவார்கள் என்று பயந்ததினால்”

உட்கார்ந்து

சாப்பிடும்போது மேஜை இல்லாமல் உங்களுடைய கலாச்சாரத்தில் எப்படி அமருவார்கள் என்பதைக் குறிக்கும் சொல்லைப் பயன்படுத்தவும்.

Matthew 15:36

இது இயேசு கலிலேயா மக்களில் அநேகரை போஷிக்கும் சம்பவத்தின் கணக்கைத் தொடர்கிறது.

அவர் எடுத்து

“இயேசு எடுத்து.” மத்தேயு 14:19 இல் மொழிபெயர்த்ததைப் போல மொழிபெயர்க்கவும்.

அவர்களுக்குக் கொடுத்தார்

“அப்பத்தின் துண்டுகளையும் மீன்களையும் கொடுத்தார்”

அவர்கள் சேகரித்தார்கள்

“சீடர்கள் சேகரித்தார்கள்”

சாப்பிட்டவர்கள்

“சாப்பிட்ட மக்கள்”

பகுதி

“நாட்டின் ஒரு பகுதி”

மகதான்

“மக்தலா” என்று சில நேரங்களில் அழைக்கப்பட்டது.