Matthew 14

Matthew 14:1

இங்கு சொல்லப்பட்டுள்ள சம்பவங்கள் நடக்கும் முன்பே மத்தேயு 14:03

14:11,12 வரை கூறப்பட்டுள்ள சம்பவங்கள் நடந்தது.

அந்த சமயத்தில்

“அந்த நாட்களில்” அல்லது “இயேசு கலிலேயாவில் ஊழியம் செய்து கொண்டிருந்த போது.”

ஏரோது ராஜா

ஏரோது அந்திப்பா, நான்கில் ஒரு பகுதி இஸ்ரவேலை ஆள்பவன்.

இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டு

“இயேசுவைக் குறித்த சான்றுகளைக் கேள்விப்பட்டு” அல்லது “இயேசுவின் புகழைக் குறித்துக் கேள்விப்பட்டு”

அவன் சொன்னான்

ஏரோது சொன்னான்

Matthew 14:3

இது ஏரோது எவ்வாறு யோவான் ஸ்நானகனைக் கொன்றான் என்பதைக் குறித்த கணக்கைச் சொல்லுகிறது. யோவானை ஏரோது பிடித்துக்கட்டி சிறைச்சாலையில் போட்டான்.

அநேகமாக, ஏரோது தனக்காக இக்காரியத்தைச் செய்ய மற்றவர்களுக்குக் கட்டளை இட்டிருக்கலாம்.

யோவானை ஏரோது பிடித்து

“ஏரோது யோவானைக் கைது செய்தான்”

யோவான் அவனிடம், “அவளை உன் மனைவியாக வைக்க நியாமில்லை, என்றான்.

“ஏனென்றால், அவளை அவனின் மனைவியாக வைக்க அவனுக்கு நியாயமில்லை என்று யோவான் அவனிடம் சொன்னான்.”

யோவான் அவனிடம் சொன்னான்

“யோவான் ஏரோதிடம் சொல்லிக்கொண்டே இருந்தான்.” (UDB பார்)

இது நியாயமில்லை

எரோதியாளை ஏரோது திருமணம் செய்யும்போது பிலிப்பு உயிரோடு இருக்கிறான் என்பதை UDB அனுமானிக்கிறது. ஆனால் மோசேயின் சட்டமும் ஒருவன் தன சகோதரனின் மனைவியைத் திருமணம் செய்வதைத் தடுக்கிறார்.

Matthew 14:6

இது ஏரோது யோவான் ஸ்நானகனை எவ்வாறு கொன்றான் என்பதைக் குறித்துத் தொடர்ந்து சொல்லுகிறது.

நடுவில்

பிறந்த நாள் விழாவைக் கொண்டாட வந்திருக்கும் விருந்தாளிகள் நடுவில்

Matthew 14:8

இது ஏரோது யோவான் ஸ்நானகனை எவ்வாறு கொன்றான் என்பதைக் குறித்துத் தொடர்ந்து சொல்லுகிறது. தனது தாயால் போதிக்கப்பட்டபிறகு
மறு மொழிபெயர்ப்பு: “அவள் தாய் அவளுக்கு போதித்தப்பிறகு.”

போதித்து

“பயிற்சி கொடுத்து”

என்ன கேட்கவேண்டுமென்று

“என்ன கேட்கலாமென்று” என்று இதை மொழிபெயர்க்கலாம். இந்த வார்த்தைகள் மூல பாஷை கிரேக்கத்தில் இல்லை. இவைகள் இச் சம்பவத்தால் மறைத்துச் சொல்லப்படுகிறது.

அவள் சொன்னாள்

“அவள்” என்ற பிரதிப்பெயர் ஏரோதின் மகளைக் குறிக்கிறது.

தட்டு

பெரியத் தட்டு

அவளின் வேண்டுகோளின் நிமித்தம் ராஜா மிகவும் வருந்தினான்

“அவளின் வேண்டுகோள் ராஜாவை மிகவும் கலங்கச் செய்தது.”

ராஜா

ராஜா ஏரோது அந்திப்பாஸ்

Matthew 14:10

ஏரோது யோவான் ஸ்நானகனைக் கொலை செய்ததன் கணக்கை இது தொடர்கிறது.

அவன் தலை ஒரு தட்டின் மீது வைத்துக்கொண்டுவரப்பட்டு அந்தச் சிறு பெண்ணுக்குக் கொடுக்கப்பட்டது.

“யாரோ ஒருவன் அவன் தலையை ஒரு தட்டில் வைத்து அந்தச் சிறு பெண்ணுக்குக் கொடுத்தான்.”

தட்டு

இது ஒரு பெரிய தட்டு

சிறு பெண்

வாலிபப் பெண்ணைக் குறிக்கும் சொல்லைப் பயன்படுத்தவும்.

அவன் சீடர்கள்

“யோவானின் சீடர்கள்”

சடலம்

“செத்துப்போன சரீரம்”

அவர்கள் போய் இயேசுவிடம் சொன்னார்கள்

“யோவானின் சீடர்கள் இயேசுவிடம் சென்று யோவான் ஸ்நானகனுக்கு என்ன நடந்தது என்பதைச் சொன்னார்கள்”

Matthew 14:13

யோவான் ஸ்நானகன் மரித்தப் பின்பு இயேசு தனித்துச் சென்றார்

இதைக் கேள்விப்பட்டு

“யோவான் ஸ்நானகனுக்கு என்ன நடந்தது என்று கேள்விப்பட்டு” அல்லது “யோவானைக் குறித்த செய்தியைக் கேட்டார்கள்.”

அவர் பின்வாங்கி

அவர் மக்கள் நடுவிலிருந்து விலகிச் சென்றார்.

அங்கிருந்து

“அந்த இடத்திலிருந்து”

மக்கள் கூட்டத்தார் அதை கேட்டபோது

“அவர்கள் சென்றுவிட்டார்கள் என்று கேள்விப்பட்டபோது” (UDB பார்) அல்லது “அவர் சென்றுவிட்டார் என்று கூட்டத்தார் கேள்விப்பட்டபோது.”

மக்கள் கூட்டத்தார்

“மக்கள் கூட்டம்” அல்லது “மக்கள்”

பின்பு இயேசு அவர்களுக்கு முன் வந்து பெரியக் கூட்டத்தைக் கண்டார்

“அவர் அக்கறைக்கு வந்தபோது ஒரு பெரியக் கூட்டத்தைக் கண்டார்.”

Matthew 14:15

தனித்துச் சென்ற இடத்திற்கும் தன்னை பின் தொடர்ந்து வந்தவர்களை இயேசு போஷித்தார்.

சீடர்கள் அவரிடம் வந்தார்கள்

“இயேசுவின் சீடர்கள் அவரிடம் வந்தார்கள்”

Matthew 14:16

தனித்துச் சென்ற இடத்திற்கும் தன்னை பின் தொடர்ந்து வந்தவர்களை இயேசு போஷித்தார்.

அவர்களுக்கு தேவை ஏற்படவில்லை

“கூட்டத்திலிருந்த மக்களுக்கு தேவை ஒன்றுமே இல்லாதிருந்தது”

நீங்கள் அவர்களுக்குக் கொடுங்கள்

“நீங்கள்” என்ற வார்த்தை பன்மையில் உள்ளது.

அவர்கள் அவரிடம் சொன்னார்கள்

“சீடர்கள் இயேசுவிடம் சொன்னார்கள்”

ஐந்து அப்பத் துண்டும் இரண்டு மீன்களும்

“5 அப்பத் துண்டுகளும் 2 மீன்களும்”

என்னிடம் அவைகளைக் கொண்டுவாருங்கள்

“அப்பத் துண்டுகளையும் மீன்களையும் என்னிடம் கொண்டு வாருங்கள்”

Matthew 14:19

தனித்துச் சென்ற இடத்திற்கும் தன்னைப் பின்தொடர்ந்து வந்தவர்களை இயேசு போஷித்தார்.

கீழே உட்கார்ந்து

அல்லது “கீழேப் படுத்து.” உங்கள் கலாச்சாரத்தில் சாப்பிட பொதுவாக எப்படி அமருவார்கள் என்று கூறும் சொல்லைப் பயன்படுத்தவும்.

எடு

“அவர் கையில் எடுத்து.” அவர் அதைத் திருடவில்லை.

துண்டுகள்

“அப்பத்தின் துண்டுகள்”

மற்றும் பார்த்து

இது 1. பார்த்துக்கொண்டிருந்த பொழுது அல்லது 2. “பார்த்த பிறகு” என்றும் பொருள் படலாம்.

அவர்கள் எடுத்து

“சீடர்கள் அவைகளைச் சேர்த்து.”

அதை சாப்பிட்டவர்கள்

“அப்பத்தையும் மீன்களையும் சாப்பிட்டவர்கள்.”

Matthew 14:22

இயேசு தண்ணீரின் மேல் நடக்கிறார்.

உடனே

“இயேசு ஐந்தாயிரம் பேர்களுக்கு உணவு கொடுத்த அடுத்த கணமே”

சாயங்காலம் ஆனபோது

“சாயங்காலத்தில்” அல்லது “இருட்டானப் பிறகு”

அலைகள் நிமித்தம் கட்டுப்படுத்தமுடியாமல்

“அலைகள் படகுக்கு எதிராக வந்து மோதியது.”

Matthew 14:25

இயேசு தண்ணீரின் மேல் நடக்கிறார்.

அவர் கடலின் மேல் நடந்து கொண்டிருந்தார்

“இயேசு தண்ணீர்களின் மேலே நடந்தார்.

அவர்கள் மிரண்டுபோயினர்

“சீடர்கள் பயந்து போனார்கள்”

ஆவி

செத்து போன மனிதனின் உடலை விட்டுப் பிரிந்த ஆவி

Matthew 14:28

இயேசு தண்ணீரின் மேல் நடக்கிறார்.

பேதுரு அவருக்கு பதிலளித்தான்

“பேதுரு இயேசுவுக்கு பதிலளித்தான்”

Matthew 14:31

இயேசு தண்ணீரின் மேல் நடக்கிறார்.

“ஓ! அற்ப விசுவாசிகளே”

மத்தேயு 6:30 இல் எவ்வாறு மொழிபெயர்த்தீர்கள் என்று பார்க்கவும்.

ஏன் நீங்கள் சந்தேகப்படுகிறீர்கள்

“நீங்கள் சந்தேகப்பட்டிருக்கக்கூடாது”

Matthew 14:34

இயேசு தனித்த இடத்திலிருந்த வந்த உடனே கலிலேயாவில் செய்து கொண்டிருந்த தன்னுடைய ஊழியத்தைத் தொடர்ந்தார்.

அவர்கள் மறுபக்கம் சென்ற பொழுது

“இயேசுவும் அவர் சீடர்களும் குளத்தின் மறுபக்கம் சென்றபொழுது.

கெனேசரேத்

கலிலேயா கடலின் வடமேற்கில் அமைந்துள்ள ஒரு சிறிய ஊர்

அவர்கள் செய்திகளை அனுப்பினர்

“அந்தப் பகுதியின் மனுஷர் செய்திகளை அனுப்பினர்”

அவர்கள் அவரைக் கெஞ்சினார்கள்

“வியாதியஸ்தர்கள் அவரைக் கெஞ்சினார்கள்”

வஸ்திரம்

“அங்கி” அல்லது “அவர் உடுத்தியிருந்தது”