Matthew 8

Matthew 8:1

இது இயேசு அற்புதமாக மக்கள் அநேகரை சுகமாக்கும் பகுதியைத் துவக்குகிறது.

இயேசு மலையிலிருந்து இறங்கினபோது திரளான மக்கள் அவரைப் பின் தொடர்ந்தார்கள்.

மறு மொழிபெயர்ப்பு: “இயேசு மலையிலிருந்து இறங்கினவுடனே, திரள் கூட்டம் அவரைப் பின் தொடர்ந்தது.” திரள் கூட்டம் மலையில் அவரோடு இருந்தவர்களையும், அவரோடு அங்கு இல்லாதவர்களையும் குறிக்கலாம்.

இதோ

“இதோ” என்ற வார்த்தை கதையின் புது கதாபாத்திரத்தைக் காட்ட உதுவுகிறது. உங்கள் மொழியில் இதை செய்ய ஏதேனும் வழி இருக்குமானால் இங்கு பயன்படுத்தவும்.

ஒரு குஷ்டரோகி

“குஷ்டரோகமுள்ள ஒரு மனுஷன்” அல்லது “தோல் வியாதிப்பட்ட ஒரு மனுஷன்” (UDB)

நீர் சித்தம் கொண்டால்

மறு மொழிபெயர்ப்பு: “நீர் விரும்பினால்” அல்லது “நீர் வாஞ்சித்தால்”. இயேசு தன்னை குணமாக்க வல்லமை உள்ளவர் என்பதை அக்குஷ்டரோகி அறிந்திருந்தான், ஆனால், இயேசு தன்னைத் தொட அவருக்கு விருப்பம் இருக்குமோ என்பதை அறியாதிருந்தான்.

நீர் என்னை சுத்தமாக்கும்

மறு மொழிபெயர்ப்பு: “நீர் என்னை சுகமாக்கலாம்” அல்லது “தயவு செய்து குணமாக்கும்” (UDB).

உடனே

“அப்பொழுதே”

அவன் தன குஷ்டரோகத்திநின்று குணமானான்

“சுத்தமாகு” என்று இயேசு சொன்னதில் அந்த மனிதன் குணமானான். மறு மொழிபெயர்ப்பு: “அவன் நன்றாக இருந்தான்” அல்லது “குஷ்டரோகம் அவனை விட்டது” அல்லது “குஷ்டரோகம் முடிந்தது.”

Matthew 8:4

இது இயேசு குஷ்டரோகமுள்ள மனிதனை குணமாகியக் கணக்கைத் தொடர்கிறது.

அவன்

குஷ்டரோகமிருந்த மனிதன்

ஒருவனோடும் ஒன்றும் சொல்லாதே

அந்த மனிதன் ஆசாரியனிடம் பலி செலுத்தச் சென்றபோது பேசி இருக்கக்கூடும் (UDB). ஆனாலும், அங்கு என்ன நடந்ததென்பதை ஒருவனோடும் அவன் சொல்லக்கூடாது என்று இயேசு விரும்பினார். “ஒருவனோடும் ஒன்றும் சொல்லாதே” அல்லது “நான் உன்னை சுகமாக்கினேன் என்பதை ஒருவனோடும் சொல்லாதே” என்று மொழிபெயர்க்கலாம்.

உன்னை ஆசாரியனிடத்தில் காண்பி

யூத சட்டம் குணமான தன் தோலை அம்மனிதன் ஆசாரியனிடத்தில் காண்பிப்பதை எதிர்பார்க்கிறது. ஏனென்றால் ஆசாரியனே அவனை மறுபடியும் மற்ற மனுஷரோடு இருக்க அனுமதிப்பவன்.

அவர்களுக்கு சாட்சியாக மோசே கட்டளையிட்ட காணிக்கையை செலுத்து,

மோசேயின் நியாயப்பிரமாணம் ஒருவன் குஷ்டரோகத்தினின்று குணமானால் ஆசாரியனிடத்தில் நன்றிபலி செலுத்தக்கடவன் என்பதை எதிர்பார்க்கிறது. ஆசாரியன் அதை ஏற்றுக்கொள்ளும்போது அவன் சுகமானான் என்பதை மனுஷர் அறிந்து கொள்ளுவார்கள்.

அவர்களுக்கு

இது 1. ஆசாரியர்களைக் குறிக்கலாம் அல்லது 2. மக்களைக் குறிக்கலாம் அல்லது 3. இயேசுவின் விமர்சகர்களைக் குறிக்கலாம். அந்த குழுக்களைக் குறிக்கும் பெயர்ச்சொல்லின் மாற்றுச் சொல் ஏதேனும் உங்கள் மொழியில் இருந்தால் அதை பயன்படுத்தவும்.

Matthew 8:5

இயேசு அநேகரை குணமாக்கிய கணக்கைத் தொடர்கிறது.

அவனுக்கு ... அவனுக்கு

இயேசு

முடக்குவாதம்

வியாதியால் “அசையக் கூடாமல்”

இயேசு அவனிடம், “நான் வந்து அவனைக் குணப்படுத்துவேன்” என்று சொன்னார்.

“இயேசு நூற்றுக்கு அதிபதியைப் பார்த்து, “நான் உன் வீட்டிற்கு வந்து உன்னுடைய வேலைக்காரனை சுகமாக்குவேன்.”

Matthew 8:8

இயேசு அநேகரை குணமாக்கிய கணக்கைத் தொடர்கிறது.

என்னுடைய கூரையின் கீழ் நீர் பிரவேசிக்கவேண்டும்

“நீர் என்னுடைய வீட்டிற்குள் பிரவேசிக்கவேண்டும்”

சொல்லும் ஒரு வார்த்தை

“கட்டளைக் கொடும்”

வீரர்கள்

“தேறின போர்வீரர்கள்”

இஸ்ரவேலிலும் கூட நான் இந்த அளவு விசுவாசம் உள்ளவரைக் காணவில்லை

தேவனுடைய பிள்ளைகள் என்றும் மற்ற எவரை விடவும் விசுவாசம் உடையவர்கள் என்றும் எண்ணப்படும் இஸ்ரவேலிலும் கூட இவ்வளவு விசுவாசத்தை நான் காணவில்லை. இயேசு அது தவறு என்றும் நூற்றுக்கு அதிபதியின் விசுவாசம் பெரியது என்றும் சொன்னார்.

Matthew 8:11

ரோம நூற்றுக்கு அதிபதியின் வேலைக்காரனை சுகமாக்கின கதை தொடர்கிறது.

நீங்கள்

“அவரைப் பின் தொடர்ந்தவர்களைக்” குறிக்கும்.

கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும்

இதை “எல்லா இடத்திலிருந்தும்,” அல்லது “தூரத்திலிருந்து எல்லா திசையிலிருந்தும்” என்று மொழிபெயர்க்கலாம்.

மேஜையில் சாய்ந்து

இந்த கலாச்சாரத்தில் மக்கள் மேஜையின் பக்கவாட்டில் சாய்ந்து கொண்டு உணவு உண்பர். நண்பர்களும் குடும்பத்தினரும் ஒன்றாக வாழ்வதைக் குறிக்கும் ஆகுபெயராகும். “குடும்பம் மற்றும் நண்பர்களாக வாழ்வார்கள்” என்றி மொழிபெயர்க்கலாம்.

ராஜ்ஜியத்தின் மகன்கள் எறியப்படுவார்கள்

“தேவன் ராஜ்ஜியத்தின் மகன்களை எறிவார்”

ராஜ்ஜியத்தின் மகன்கள்

“...இன் மகன்கள்” என்ற பதம் ஒன்றிற்கு சொந்தம் என்று குறிக்கிறது. இந்த இடத்தில் தேவனுடைய ராஜ்ஜியத்தைக் குறிக்கிறது. “மகன்கள்” எறியப்படுவதும் அன்னியர் வரவேற்க்கப்படுவதும் முரண்தொடையாக உள்ளது. “தேவன் தங்களை ஆளும்படி ஒப்புக்கொடுத்திருக்க வேண்டியவர்கள்” என்று இதை மொழிபெயர்க்கலாம். (UDB)

புறம்பான இருள்

இந்த வெளிக்கொணர்வு தேவனை மறுப்பவர்கள் அடையும் நித்திய இடத்தைக் குறிக்கிறது. “தேவனிடத்திலிருந்து தள்ளி இருக்கும் இருளான இடம்.”

அப்படியே உங்களுக்கும் செய்யப்படுவதாக

“அப்படியே நான் உங்களுக்கு செய்வேன்.”

வேலைக்காரன் சுகமானான்

“இயேசு வேலைக்காரனை சுகமாக்கினார்.”

அந்த மணி நேரத்தில்

“இயேசு அவன் வேலைக்காரனை சுகமாக்குவேன் என்று சொன்ன அதே நேரத்தில்”

Matthew 8:14

இயேசு அநேகரை சுகமாக்கும் கணக்குத் தொடர்கிறது

இயேசு வந்து விட்டார்

இயேசு தன்னுடைய சீடர்களோடு வந்திருக்கலாம், ஆனால் சம்பவத்தின் முழு கவனமும் இயேசு சொன்னவற்றின் மீதும் அவர் என்ன பேசினார் என்பதின் மீதிலுமே உள்ளது. தவறான அர்த்தம் கொள்ளுதலைத் தவிர்க்கும் வகையில் சீடர்கள் அங்கு இருப்பதைச் சொல்லவும்.

பேதுருவின் மாமியார்

“பேதுருவின் மனைவியின் தாய்”

காய்ச்சல் அவளை விட்டது

காய்ச்சல் அவளை விட்டது என்று சொல்லுவதால் காய்ச்சல் ஆள்தத்துவம் உடையது என்று வாசிப்பவர் புரிந்து கொள்வர் என்றால் “அவள் தேறினாள்” அல்லது “இயேசு அவளை சுகமாக்கினார்” என்று மொழிபெயர்க்கவும்.

எழுந்து

“படுக்கையை விட்டு எழுந்து”

Matthew 8:16

இயேசு அநேகரை சுகமாக்கும் கணக்குத் தொடர்கிறது

சாயங்காலம்

மாற்கிலிருந்து UDB இயேசு கப்பர்நகூமிற்கு ஓய்வுனாளன்று வந்தார் என்பதை எடுத்துள்ளது (மாற்கு 1:21). ஏனென்றால் யூதர்கள் ஓய்வுநாளில் வேலையோ பிரயாணமோ செய்யமாட்டார்கள். மக்களை இயேசுவிடம் கொண்டு வர சாயங்காலம் வரை காத்திருந்தார்கள். தவறான அர்த்தம் கொள்ளவில்லை என்றால், ஓய்வுநாளை குறிப்பிடவேண்டும் என்ற அவசியம் இங்கில்லை.

ஒரு வார்த்தையாலே அவைகளைத் துரத்தினார்.

இது மிகைப்படுத்துதல் ஆகும்: இயேசு ஒரு வார்த்தைக்கு மேலே சொல்லி இருக்கக்கூடும். “இயேசு ஒரு முறை தான் பேசவேண்டி இருந்தது;உடனே பிசாசுகள் அவனை விட்டது.”

ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது நிறைவேறியது

“இயேசு, இஸ்ரவேலிடம் வெளிப்படுத்தும்படி தேவன் ஏசயாவிடம் சொன்ன தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றினார்.”

ஏசாயாவால் சொல்லப்பட்டது

“ஏசாயாவால் சொல்லப்பட்டது”

பலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நோய்களை சுமந்து

“பலவீனத்திலிருந்து மக்களை விடுதலையாக்கி அவர்களை நலமாக்கினார்”

Matthew 8:18

தன்னை பின் தொடர்பவர்களிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை இயேசு விரிவுபடுத்தினார்.

அவர், அவரை

இது ஏசுவைக் குறிக்கிறது

வழிமுறைகளை அவர் கொடுத்தார்

“என்ன செய்யவேண்டும் என்பதை அவர்களுக்குச் சொன்னார்”

பின்பு

“வழிமுறைகளைச் சொன்ன” பின்பு ஆனால் படகில் ஏறும் முன்பு (UDB யைப் பார்க்கவும்)

எங்குவேண்டுமானாலும்

“எவ்விடமும்”

நரிகளுக்கு குழிகள் உண்டு, வானத்தின் பறவைகளுக்குக் கூடுண்டு

இங்குள்ள விலங்குகள் காட்டு விலங்குகளின் பெரிய கூட்டத்தையே பிரதிபலிக்கிறது.

நரிகள்

நாய்களைப்போல் நரிகள் கூடிட்டு வாழும் பறவைகளையும் மற்ற சிறிய மிருகங்களையும் தின்னும். நரிகள் உங்கள் பகுதியில் பரிட்சயம் இல்லை என்றால் நாய் போன்ற விலங்குகளின் பெயரோ அல்லது ரோமம் உள்ள மிருகத்தின் பெயரையோ குறிப்பிடலாம்.

குழிகள்

நரிகள் நிலத்தில் குழிகளைத் தோண்டி அதில் வாழும். “நரிகளுக்கு” பதில் நீங்கள் சொல்லும் மிருகம் வாழும் இடத்தைக் குறிக்க பொருத்தமான வார்த்தையைப் பயன்படுத்தவும்.

தலைசாய்க்க இடமில்லை

“தூங்குவதற்கு அவர்களுக்கென்று சொந்தமாக ஒரு இடமில்லை”

Matthew 8:21

இயேசு தன்னைப் பின்பற்றுபவர்களிடம் தான் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை விரிவுபடுத்துகிறார்.

என்னுடைய தகப்பனை அடக்கம் பண்ணப் போக அனுமதிக்கவேண்டும்.

இது ஒரு சாந்தமான வேண்டுகோள். மரித்தவர்களை அன்றே அடக்கம் செய்வது யூத முறைமையாகும். அதனால், இந்த மனிதனின் தந்தை மரிக்கவில்லை என்ற போதும் “அடக்கம்” என்ற சொல்லை தன் தந்தையை மரிக்கும்வரை ஒரு சில நாட்களோ அல்லது சில வருடங்களோ கவனிக்க வேண்டும் என்பதைச் சொல்லாமல் சொல்லப் பயன்படுத்தினான். அவனின் தந்தை மரித்திருந்தால், ஒரு சில மணி நேரங்கள் தான் போய் வருகிறேன் என்று கேட்டிருப்பான். தந்தை மரித்தானோ அல்லவோ என்பதை தவறான அர்த்தம் தவிர்க்க மட்டும் பயன்படுத்தவும்.

மரித்தவர்கள் மரித்தோரை அடக்கம் செய்யட்டும்.

இது ஒரு பாதி, நிறைவு பெறாத வாக்கியமாக்கும். அதனால் சில வார்த்தைகளை மட்டும் பயன்படுத்தவும். இங்கிருக்கும் “அடக்கம்” என்ற வார்த்தையை அம்மனிதனின் வேண்டுகோளில் உள்ள “அடக்கம்” என்ற வார்த்தையிலுள்ளதைப் பயன்படுத்தவும்.

விடு ... அடக்கம் செய்ய

இது ஒருவனின் தந்தையின் பொறுப்பிலிருந்து ஒரு மனுஷனை மறுப்பதின் பெருவழி. “மரித்தவர் அடக்கம் செய்யட்டும்” அல்லது “மரித்தோர் அடக்கம் செய்ய விடு,” “மரித்தோருக்கு தங்களைத் தாங்களே அடக்கம் செய்வதைத் தவிர வாய்ப்பு கொடாதே.”

மரித்தோர் ... தங்கள் மரித்தோரை

“மரித்தோர்” என்பது தேவ ராஜ்யத்திற்கு வெளியில் இருப்பவர்களைக் குறிக்க பயன்படும் உருவணி ஆகும். “தங்கள் மரித்தோரை” தேவ ராஜ்யத்திற்கு வெளியில் இருந்து மரிப்பவனின் சொந்தக்காரர்கள்.

Matthew 8:23

இயேசு புயலை அடக்கும் கதையை இது துவக்குகிறது.

படகில் படகில் ஏறினார்

“இயேசு படகில் ஏறினார்”

அவர் சீடர்கள் அவரைப் பின் தொடர்ந்தார்கள்

மத்தேயு 08:21, 8:22 இல் “சீடர்” மற்றும் “பின்பற்று” என்ற வார்த்தைகளைக் குறித்த வார்த்தைகளையே பயன்படுத்தவும்

இதோ

இது பெரிய கதையில் இன்னுமொரு சம்பவத்தின் துவக்கத்தைக் குறிக்கிறது. இங்கு முன் சம்பவங்களில் இருந்தவர்கள் அல்லாமல் வேறே மக்களை ஈடுபடுத்தி இருக்கலாம். உங்கள் மொழி இதை செய்ய ஒரு வழி வைத்திருக்கலாம்.

கடலில் ஒரு பெரிய புயல் எழும்பினது

“ஒரு பெரிய புயல் கடலின் மேல் எழும்பினது”

அதனால் படகு அலைகளால் மூடப்பட்டது

“அதனால் அலைகள் படகை மூடிற்று.”

அவரை எழுப்பி, “எங்களைக் காப்பாற்றும்” என்று சொன்னார்கள்.

“எங்களைக் காப்பாற்றும்” என்ற வார்த்தையோடு அவரை எழுப்பவில்லை. முதலில் அவரை “எழுப்பி” பின் “எங்களைக் காப்பாற்றும்” என்று சொன்னார்கள்.

நாங்கள் மரிக்கப்போகிறோம்

“நாங்கள் மரித்துக்கொண்டிருக்கிறோம்”

Matthew 8:26

இயேசு புயலை அடக்கும் சம்பவத்தை இது முடிக்கிறது.

அவர்களை

சீடர்கள்

நீங்கள் ... நீங்கள்

பன்மை

ஏன் நீங்கள் பயப்படுகிறீர்கள் ...?

பதிலை எதிர்பார்க்காமல் இயேசு இந்தக் கேள்வியினால் அவர்களைக் கடிந்துகொண்டார். “நீங்கள் பயப்படக்கூடாது” அல்லது “நீங்கள் பயப்படும்படி ஒன்றுமில்லை” என்று இது அர்த்தப்படும்.

அற்ப விசுவாசிகளே

“நீங்கள்” பன்மையில் உள்ளது. மத்தேயு 6:30 இல் உள்ளதை மொழிபெயர்த்ததைப் போல மொழிபெயர்க்கவும்.

இவர் எப்படி பட்டவரோ, கடலும் காற்றும் கூட அவருக்கு கீழ்ப்படிகிறதே??

இந்த கேள்வியினால் சீடர்கள் திகைத்துப்போனார்கள் என்பதைத் தெரிவிக்கிறது. “காற்றும் கடலும் கூட அவருக்கு கீழ்ப்படிகிறதே! இவர் எப்படிப்பட்டவரோ?” அல்லது “நாம் பார்த்த மற்ற மனிதர்களைப் போல் அல்ல இவர்! காற்றும் கடலும் கூட இவருக்கு கீழ்ப்படிகிறதே!” என்று மொழிபெயர்க்கலாம்.

காற்றும் கடலும் கூட இவருக்கு கீழ்ப்படிகிறதே

மனிதர்களோ அல்லது விலங்குகளோ கீழ்படிவது பெரிய விசேஷமில்லை. ஆனால் காற்றும் தண்ணீரும் கீழ்ப்படிவது திகைப்புத்தான். இந்த ஆள்தத்துவப்படுவது இயற்கைப் பொருள்களும் கேற்கக்கூடும் என்றும் மனுஷர்களைப் போல் பதில் செய்யவும் கூடும் என்று விளக்குகிறது.

Matthew 8:28

இது இயேசு பிசாசினால் பிடிபட்ட இரண்டு பேரை சுகமாக்கும் சம்பவத்தைத் துவக்குகிறது.

மறுபகுதிக்கு

“கலிலேயாக் கடலின் மறுப்பக்கத்தில்”

கதரேனர்களுடைய நாடு

கதரேனர்களுடைய நாடு

கதரேனர்கள் கதரா என்னும் பட்டணத்தினிமித்தம் இப்பேர் பெற்றனர்.

அவர்கள் ... முரட்டாட்டமானவர்கள், அதனால் ஒரு வழிப்போக்கனும் அவ்வழியே செல்ல முடியாது.

இவர்களைப் பிடித்திருந்த பிசாசுகள் மிகவும் பயங்கரமானவைகள்; அதனால் ஒருவரும் அவ்வழியே செல்ல முடியவில்லை.

இதோ

இது பெரிய கதையில் இன்னுமொரு சம்பவத்தின் துவக்கத்தைக் குறிக்கிறது. இங்கு முன் சம்பவங்களில் இருந்தவர்கள் அல்லாமல் வேறே மக்களை ஈடுபடுத்தி இருக்கலாம். உங்கள் மொழி இதை செய்ய ஒரு வழி வைத்திருக்கலாம்.

தேவக் குமரனே, நாங்கள் உம்மிடத்தில் என்ன செய்ய வேண்டும்?

இந்த முதல் கேள்வியானது ஆக்ரோஷமானது.

தேவக் குமாரன்

பிசாசுகள் இந்த பெயரை இயேசு யாராய் இருக்கிறார் என்பதால் அவர் வரவேற்கப்படவில்லை என்பதைச் சொல்லப் பயன்படுத்துகின்றன.

குறித்த நேரம் முன்பே எங்களைத் துன்புறுத்தவா வந்தீர்?

இந்த இரண்டாம் கேள்வியும் ஆக்ரோஷமானதுதான். பதிலை எதிர்பார்க்கவில்லை என்றாலும் , இது, “தேவன் எங்களைத் தண்டிக்கும்படி குறித்த நேரத்திற்கு முன் எங்களைத் தண்டித்து நீர் தேவனுக்கு கீழ்படியாமல் போகாதிரும்.” என்று அர்த்தப்படுகிறது.

Matthew 8:30

இது இயேசு பிசாசினால் பிடிபட்ட இரண்டு பேரை சுகமாக்கும் சம்பவத்தைத் துவக்குகிறது.

இப்பொழுது

இது, கதைப் பின்னும் தொடரும் முன் ஆசிரியர் வாசகர்களுக்கு தெரியவேண்டியதைத் தெரிவிக்கிறார் என்பதைக் குறிக்கிறது. இயேசு வருவதற்கு முன்னமே பன்றிகள் அங்கு இருந்தன.

நீர் எங்களைத் துரத்துவீரானால்

இது, “நீர் எங்களைத் துரத்தப் போகிறபடியினால்” என்றும் அர்த்தம் கொள்ளலாம்.

எங்களை

மற்ற யாரையும் அல்ல

அவைகளை

அம்மனிதனுக்குள்ளிருந்தப் பிசாசுகள்

பிசாசுகள் வெளியே வந்து பன்றிகளுக்குள் சென்றன

“பிசாசுகள் அவனை விட்டு மிருகங்களுக்குள் சென்றன”

இதோ

“இதோ” என்ற வார்த்தை ஒரு ஆச்சரியப்படுத்தும் கருத்திற்கு நம் கவனத்தைத் திருப்ப நம்மைத் தயார்படுத்துகிறது.

செங்குத்தான மலையிலிருந்து வேகமாக இறங்கின

“செங்குத்தான மலையிலிருந்து வேகமாக ஓடி இறங்கின”

தண்ணீரில் அழிந்தன

“மூழ்கின”

Matthew 8:33

இது இயேசு பிசாசினால் பிடிபட்ட இரண்டு பேரை சுகமாக்கும் சம்பவத்தைத் முடிக்கிறது.

பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவன்

“பன்றிகளைப் பராமரித்துக் கொண்டிருந்தவன்”

பிசாசுகளால் ஆளப்பட்டிருந்த இரண்டு மனிர்தர்களுக்கு என்ன ஆனது

பிசாசுகளால் ஆளப்பட்டிருந்த இரண்டு மனிர்தர்களுக்கு என்ன ஆனது

பிசாசு பிடித்திருந்த மனிதருக்கு இயேசு என்ன செய்தார்.

இதோ

இது பெரிய கதையில் இன்னுமொரு சம்பவத்தின் துவக்கத்தைக் குறிக்கிறது. இங்கு முன் சம்பவங்களில் இருந்தவர்கள் அல்லாமல் வேறே மக்களை ஈடுபடுத்தி இருக்கலாம். உங்கள் மொழி இதை செய்ய ஒரு வழி வைத்திருக்கலாம்.

எல்லா பட்டணமும்

அதிகமான அல்லது முக்கால்வாசி மக்கள் என்று அர்த்தப்படலாம். ஒவ்வொருவனுமல்ல.

பகுதி

“பட்டணமும் அதின் அருகிலுள்ள நிலமும்”