Matthew 3

Matthew 3:1

அநேக ஆண்டுகள் கழிந்து அதாவது யோவான் ஸ்நானகன் வளர்ந்து பிரசங்கம் செய்ய துவங்கும் பொழுது இந்தப் பகுதி நடைபெறுகிறது.

இது தான் அவன்

இந்த “அவன்” என்ற பிரதிப்பெயர் யோவான் ஸ்நானகனைக் குறிக்கிறது.

இவனே ஏசாயா தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டவன். என்னவென்றால்,

மறு மொழிபெயர்ப்பு: “ஏசாயா தீர்க்கதரிசி இவ்வாறு சொன்ன பொழுது அவன் யோவான் ஸ்நானகனைப் பற்றியே கூறினான்.”

கர்த்தரின் வழியை ஆயத்தப்படுத்து, அவரின் பாதைகளை நேராக்கு

கர்த்தரின் வழியை ஆயத்தப்படுத்து, அவரின் பாதைகளை நேராக்கு

இது மக்களை மனம் திரும்புவதற்கு ஆயத்தப்படுவதற்காக யோவான் ஸ்நானகனின் அழைப்பின் செய்தியிலுள்ள உருவகமாகும்.

Matthew 3:4

யோவான் ஸ்நானகன் தொடர்ந்து பிரசங்கம் செய்துகொண்டிருந்தார்

அவர்கள் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்

அவர்கள் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்

“யோவான் அவர்களை ஞான ஸ்நானம் பண்ணுவித்தான்.”

அவர்கள்

எருசலேமிலிருந்தும், யூதேயா மற்றும் யோர்தான் நதியைச் சுற்றியுள்ள இடங்களிலிருந்து வந்த ஜனங்கள்.

Matthew 3:7

யோவான் ஸ்நானகன் தொடர்ந்து பிரசங்கம் செய்துகொண்டிருந்தார்

விஷமுள்ள சர்ப்பத்தின் பிள்ளைகளே

இது உருவணி ஆகும். விஷமுள்ள சர்ப்பங்கள் ஆபத்தானவைகளும் தீமையைக் குறிப்பதுமாகும். மறு மொழிபெயர்ப்பு: “தீமையான விஷமுள்ள சர்ப்பங்களே!” அல்லது “நீங்கள் விஷமுள்ள சர்ப்பத்தை போல தீமையானவர்கள்”

வரப்போகும் கோபாக்கினைக்கு தப்பித்துக்கொள்ள உங்களை எச்சரித்தவன் யார்

பாவத்தை விட மனதில்லாமல் தேவன் தரும் தண்டனையிலிருந்து மட்டும் தப்பித்துக்கொள்ள ஞானஸ்நானம் கொடுங்கள் என்று யோவானை அவர்கள் கேட்டுக் கொண்டதால், அவன் அவர்களை இந்த பதில் தேவையில்லாத கேள்வியைக் கேட்டுக் கடிந்து கொண்டான். “ஞானஸ்நானம் பெற்றால் தேவனுடைய கோபாக்கினையிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று நினையாதே.”

வரப்போகிற கோபாக்கினையிலிருந்தது

மறு மொழிபெயர்ப்பு: “வரப்போகிற தண்டனையிலிருந்து” அல்லது “அவன் செயல்படவிருக்கிற தேவனுடைய கோபாக்கினையிலிருந்து” அல்லது “ஏனென்றால் தேவன் உங்களைத் தண்டிக்கப்போகிறார்.” “கோபாக்கினை” என்ற வார்த்தை தேவன் தரும் தண்டனையைக் குறிக்கிறது, ஏனென்றால் அவருடைய கோபம் தண்டனைக்கு முன்னிருக்கிறது.

நம் தகப்பன் ஆபிரகாம் நமக்குண்டு

“ஆபிரகாம் நம் முன்னோன்” அல்லது “நாம் ஆபிரகாமின் சந்ததி”

இந்தக் கல்லுகளிலிருந்தும் ஆபிரகாமுக்கு பிள்ளைகளை தேவனுக்கு எழுப்பக் கூடும்

“இந்தக் கல்லுகளிலிருந்தும் தேவன் மாம்ச சந்ததிகளை உண்டாக்கி ஆபிரகாமுக்குக் கொடுக்க முடியும்”

Matthew 3:10

யோவான் ஸ்நானகன் தொடர்ந்து பிரசங்கித்துக் கொண்டிருந்தான்.

கோடரியானது ஏற்கனவே மரத்தின் வேரின் அருகே வைக்கப்பட்டுள்ளது. நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியில் போடப்படும்.

கோடரியானது ஏற்கனவே மரத்தின் வேரின் அருகே வைக்கப்பட்டுள்ளது. நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியில் போடப்படும்.

உருவக அர்த்தம் என்னவென்றால் “வெட்டப்போகிற மரத்தின் வேரருகே கோடாரியை வைத்துள்ள மனிதனைப் போல தேவன், பாவத்திலிருந்து நீங்கள் மனம் திரும்பவில்லை என்றால், உங்களைத் தண்டிக்கும்படி ஆயத்தமாய் இருக்கிறார்.”

நான் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்

யோவான் மனம்திரும்பின மக்களை ஞானஸ்நானம் பண்ணுவித்தான். ஆனால் எனக்கு பின் வருகிறவர் யோவானுக்கு பின் வருகிறவர் இயேசுவே

அவர் உங்களுக்குப் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார்

இது ஒரு உருவகமாகும். இதன்அர்த்தம் என்னவென்றால் “உங்களுக்குள் தேவன் பரிசுத்த ஆவியை வைத்து, நியாயம் விசாரிக்க உன்னை அக்கினி ஊடே நடத்தி, தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கப்போகிறவர்களை சுத்திகரிக்கிறார்.”

அவர் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்

இயேசு உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.

பதரை முழுவதும் கோதுமை உலைக்களத்தினின்று சுத்தம் செய்யும்படி அவரின் தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது

இந்த உருவகம் நீதியுள்ளவர்களையும் அநீதியுள்ளவர்களையும் கிறிஸ்து வேறுபிரிக்கும் முறைக்கும், ஒரு மனிதன் கோதுமையையும் பதரையும் பிரிக்கும் முறைக்கும் ஒப்புமைப்படுத்துகிறது. இது ஒரு உருவகம் ஆக மொழிபெயர்க்கப்பட்டால் அவ்வொப்புமைப் புரியும்: “கிறிஸ்துவானவர் தூற்றுக்கூடை தன் கையில் உள்ள மனிதனுக்கு ஒப்பாயிருக்கிறார்.”

அவரின் தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது

மறு மொழிபெயர்ப்பு: “கிறிஸ்து தூற்றுக்கூடையைப் பிடித்துக்கொண்டிருக்கிறார் ஏனென்றால் அவர் ஆயத்தமாயிருக்கிறார்.”

தூற்றுக்கூடை

இந்த உபகரணம் கோதுமையை புடைத்து பதரை கோதுமையினின்று பிரிப்பதற்கு பயன்படுவதாகும். கனமுள்ள தானியம் கீழே விழும். வேண்டாத பதர் காற்றினால் வாரிக்கொண்டு போகப்படும். இது வைக்கோல் தூவுகிற உபகரணத்துக்கு சமானம்.

அவரின் உலைக்களம்

தானியத்திலிருந்து பதரைப் பிரிக்கும் இடம் இது.மறு மொழிபெயர்ப்பு: “அவரின் மைதானம்” அல்லது “தானியத்திலிருந்து பதரைப் பிரிக்கும் மைதானம்”

அவரின் களஞ்சியத்தில் கோதுமையை சேர்ப்பார்...பதரையோ அவியாத அக்கினியில் சுட்டெரிப்பார்

அவரின் களஞ்சியத்தில் கோதுமையை சேர்ப்பார்...பதரையோ அவியாத அக்கினியில் சுட்டெரிப்பார்

தேவன் எவ்வாறு நீதிமான்களையும் தீமையானவர்களையும் பிரிக்கிறார் என்பதைச் சொல்லும் உருவகம் இதுவாகும். கோதுமையானது விவசாயின் களஞ்சியம் செல்வது போல் நீதிமான்கள் பரலோகம் செல்வர், பதரைப்போல் இருக்கும் மக்களை அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார்.

Matthew 3:13

இயேசு எப்படி யோவான் ஸ்நானகனால் ஞானஸ்நானம் பெற்றார் என்பதைக் குறிக்கும் கணக்கை இவை துவக்குகிறது.

உன்னால் நான் ஞானஸ்நானம் பண்ணப்படவேண்டும்.

உன்னால் நான் ஞானஸ்நானம் பண்ணப்படவேண்டும்.

“நான்” யோவான் ஸ்நானகன்; “நீங்கள்” இயேசு கிறிஸ்துவைக் குறிக்கும்.

நீர் என்னிடத்தில் வருகிறீரோ?

இது பதிலை எதிர்பார்க்காதக் கேள்வி. மறு மொழிபெயர்ப்பு: “நீர் பாவி இல்லை ஆதலால், நீர் என்னிடம் வரக்கூடாது, மாறாக நீர் என்னை ஞானஸ்நானம் பண்ணுவியும்.” “நீர்” இயேசு கிறிஸ்துவைக் குறிப்பதையும், “நான்” யோவானைக் குறிப்பதையும் குறித்துக்கொள்ளுங்கள்.

Matthew 3:16

இயேசு எப்படி யோவான் ஸ்நானகனால் ஞானஸ்நானம் பெற்றார் என்பதைக் குறிக்கும் காரியங்களை இவை துவக்குகிறது.

அவர் ஞானஸ்நானம் பெற்ற பின்பு

அவர் ஞானஸ்நானம் பெற்ற பின்பு

மாற்று மொழிபெயர்ப்பு: “யோவான் இயேசுவை ஞானஸ்நானம் பண்ணுவித்தப்பின்பு.”

வானங்கள் அவருக்குத் திறக்கப்பட்டது

மறு மொழிபெயர்ப்பு: “வானம் திறந்திருக்கிறதை அவர் கண்டார்” அல்லது “வானங்கள் திறக்கிறதை அவர் கண்டார்.”

புறாவைப்போல் கீழே இறங்கி வருகிறதை

புறாவைப்போல் கீழே இறங்கி வருகிறதை

இது 1. ஆவியானவர் புறாவைப்போல் இருந்தார் என்பது ஒரு சாதாரண கூற்றாக இருக்கலாம். 2. ஆவியானவர் மென்மையாக இயேசுவின் மேல் இறங்கினதை, புறா இறங்குவதற்கு, ஒப்புமையாக சொல்லப்பட்டிருக்கலாம்.

இதோ

இது இந்த பெரிய கதையில் இன்னுமொரு சம்பவத்தின் ஆரம்பத்தை குறிக்கிறது. கடந்த சம்பவங்களிலிருந்த மக்கள் அல்லாமல் வேறே மக்களை ஈடுபடுத்தி இருக்கலாம். உங்கள் மொழியில் இதை செய்ய ஒரு வழி இருக்கலாம்.